வாழ சிறந்த நாடு-நார்வே; மோசமான நாடு-நைஜர்: இந்தியாவுக்கு 134வது இடம்!

ஐ.நா. வளர்ச்சித் திட்டம் சார்பில் இதுதொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக மக்களால் வாழ்வதற்கு சிறந்த நாடாக நார்வே கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான நாடாக நைஜர் உள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் எய்ட்ஸ் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு நைஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேக்கு அடுத்து, வாழ்வதற்கு சிறந்த நாடுகளாக ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து ஆகியவை வருகின்றன.
மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜருடன் ஆப்கானிஸ்தான், சியாரா லியோன் ஆகியவை உள்ளன.
இந்தியாவுக்கு இப்பட்டியலில் 134வது இடம் கிடைத்துள்ளது.
ஜிடிபி, கல்வி, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகுப்புப் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
நைஜர் நாட்டில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பாதித்தால், அது நார்வே நாட்டில் 85 டாலர்களாக உள்ளன.
பரம ஏழைகள் என அழைக்கப்படும் 24 நாடுகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் கல்வி அறிவு அற்றவர்களாக உள்ளனர்.
உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்வோர் அதிகம் உள்ள நாடாக ஜப்பான் உள்ளது. இங்கு சராசரி ஆயுள் காலம் 82.7 ஆண்டுகளாக உள்ளது. இதுவே ஆப்கானிஸ்தானில் 43.6 ஆண்டுகளாக உள்ளது.
லிச்டென்ஸ்டீன், அதிக அளவிலான ஜிடிபியைக் கொண்டுள்ளது. இங்கு ஜிடிபியின் அளவு 85,383 டாலர்களாக உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பணக்கார நிறுவனங்கள் உள்ளன.
அதிக அளவிலான ஏழைகளைக் கொண்ட நாடாக காங்கோ உள்ளது. இங்கு ஒரு தனி நபரின் வருடாந்திர சராசரி வருமானம் 298 டாலர்களாக (சராசரியாக 15 ஆயிரம் ரூபாய்) உள்ளது.
சீனா, வெனிசூலா, பெரு, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு பெற்ற ரேங்கிங்கிலிருந்து 3க்கும் மேற்பட்ட இடங்கள் வரை உயர்ந்துள்ளன.
சீனா, கொலம்பியா, வெனிசூலாவில் கல்வி அறிவு மேம்பட்டுள்ளதால், பிற வளர்ச்சிகளும் அந்த நாடுகளில் அதிகரித்துள்ளனவாம்.
உலக அளவில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து மனித முன்னேற்றம் 15 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாம். அதில் சீனா, ஈரான், நேபாளம் ஆகியவை முன்னணியில் உள்ளன என்கிறது ஐ.நா.வின் இந்த ஆய்வுப் பட்டியல்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications