காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன்!
நாகர்கோவில்: நாகர்கோவில் இளம்பெண் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணகுடியை சேர்ந்த அந்த பெண்ணை அவரது காதலன் தனது நண்பருக்கும் விருந்தாக்கி உள்ளார். திருமண ஆசைகாட்டி தன்ணை மோசம் செய்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் நேற்று முன்தினம் ரயில்வே தண்டவளத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த 18 வயதான அந்த இளம்பெண், தன்னை வாலிபர் ஒருவர் காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்து வி்ட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி அவரது காதலரான மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர் மதுரையில் இருந்து ஜவுளி வியாபாரத்திற்காக நாகர்கோவில் வந்துள்ளார்.
அண்ணா பஸ் நிலையத்தில் வைத்து அன்புக்கும், இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாகி விட்டது.
இதையடுத்து கடந்த 5ம் தேதி அந்தப் பெண்ணை, ஊட்டிவால்மடம் ரயில்வே கிராசிங் அருகே அழைத்து சென்று புதர் மறைவில் அன்பு உல்லாசமாக இருந்துள்ளார்.
அதன் பின்னர், அவரது நண்பர் ராஜவீரன் என்பவரையும் அழைத்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்ததும் தெரிய வந்தது.
இதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலைக்காக ரயில்வே டிராக்குக்கு வந்தபோதுதான் போலீஸாரிடம் சிக்கினார்.
விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா என அன்புவிடம் கேட்டனர். ஆனால், என்னை தவிர மேலும் பலருடன் அப்பெண்ணுக்கு தொடர்பு உள்ளது, அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறிவிட்டார் அன்பு.
இதையடுத்து அன்புவையும், அவரது நண்பர் ராஜவீரனையும் போலீசார் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications