இன்டர்வியூவூக்குப் போன 28 வயதுப் பெண் கற்பழிப்பு
டெல்லி: டெல்லி அருகே வேலைக்கு இன்டர்வியூவுக்குப் போன இளம் பெண் கற்பழிக்கப்பட்டார்.
மஹிபால்பூர் என்ற இடத்திற்கு அருகே உள்ள ரங்கபுரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது 28. பட்டதாரியான அவர் ஒரு பிளாஸ்டிக் பைபர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூவுக்குச் சென்றபோது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இன்டர்வியூவுக்கு வந்த அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கொடுத்து மயக்கமடையச் செய்த பின்னர் அவரை அந்த நிறுவன உரிமையாளர் கற்பழித்து விட்டார்.
பின்னர் தப்பி ஓடி விட்ட அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ரமேஷ் வர்மா. 35 வயதாகும் அவர் வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்தில் ரமேஷ் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் ரமேஷ் மட்டுமே குற்றவாளி என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் டெல்லியில் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன ஆசிரியை ஒரு கும்பல் கற்பழித்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் இன்னொரு கற்பழிப்பு நடந்திருப்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications