சேலம் அருகே மண்ணுளி பாம்பு கடத்திய 5 பேர் கைது!
சேலம்: சேலம் அருகே மண்ணுளி பாம்புகளை கடத்தி விற்க முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள பகுதியில் இருந்து தங்கமணி, சடையப்பன், ராஜசேகர் ஆகியோர் மண்ணுளி பாம்புகளை விற்க பெங்களூருவை சேர்ந்த சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை அடுத்து அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த இரு நபர்களுடன் ஆத்தூர் வந்தனர். அங்கு அவர்களிடம் ரூ. 50 ஆயிரம் பெற்று கொண்டு மண்ணுளி பாம்புகளை விற்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் 5 பேரும் காரில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வனப்பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அதில் காரில் மண்ணூளி பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர். பெங்களூரை சேர்ந்த இரு இளைஞர்களும் கல்லூரியில் படித்து வருவதாகவும், அவர்கள் இந்த மண்ணூளி பாம்பை வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications