என்.எல்.சி. தொழிலாளர் ஸ்டிரைக் தொடங்கியது
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிரந்தரத் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
போனஸ் மற்றும் ஊக்கத் தொடர்பாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான 2 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை ஸ்டிரைக் அறிவித்தன. அவர்களுடன் மேலும் 11 தொழிற்சங்கங்களும் போராட்டத்தை அறிவித்தன.
இந்த நிலையில் நேற்று மாலை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முரளி முன்னிலையில் பேச்சு நடந்தது. என்எல்சி தரப்பில் முதன்மை பொதுமேலாளர் லூர்தஸ், கூடுதல் முதன்மை மேலாளர் அறிவு ஆகியோரும், தொமுச தரப்பில் தலைவர் வீரராமச்சந்திரன், பொதுச்செயலாளர் கோபாலன், பொருளாளர் ரகுராமன், அலுவலக செயலாளர் காத்தவராயன் ஆகியோரும், பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் தலைவர் பெருமாள், செயலாளர் திலகர், பொருளாளர் மோனிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதில் ரூ. 52,000 வரை வழங்க நிர்வாகம் முன்வந்தது. இதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து தொமுச அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் தொடங்கும் என தொமுச பொதுச்செயலாளர் கோபாலன் அறிவித்தார்.
இதைதொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
ஒட்டுமொத்த ஊழியர்களும் ஸ்டிரைக்கில் குதித்துள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. என்எல்சி வளாகத்தில் போலீஸார் குவிக்ப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications