பிரதீபா மகனை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் டிஸ்மிஸ்
அம்ராவதி: மகாராஷ்டிர மாநிலம் அம்ராவதி தொகுதியில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவத்தை எதிர்த்துப் போட்டியிடும் அமைச்சர் சுனில் தேஷ்முக் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்ராவதி தொகுதியில் போட்டியிட சுனில் தேஷ்முக் சீட் கேட்டிருந்தார். இவர் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
ஆனால் இவருக்கு சீட் மறுத்த காங்கிரஸ் மேலிடம், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு சீட் கொடுத்தது.
அரசியல் அனுபவமே இல்லாத ஷெகாவத்துக்கு சீட் கொடுத்ததால் கோபமடைந்தார் சுனில். அம்ராவதி தொகுதியில் சுயேச்சையாக அவர் போட்டியிடுகிறார்.
இதனால் ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சுனிலை போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சுனில் தேஷ்முக் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அவருடன், மேயர் அசோக் டோங்க்ரே, முன்னாள் மேயர் மிலிந்த் சிமோட் ஆகியோரும் கட்சியை விட்டு தூக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்ராவதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது மேலும் சிக்கலாகியுள்ளது.
சுனில் தேஷ்முக்குக்கு ஆதரவாக பல கவுன்சிலர்கள் களம் இறங்கிப் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications