திருவாரூர் - நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்: மம்தா
திருவாரூர்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனின் கோரிக்கையை ஏற்று, திருவாரூர் வழி தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளாராம்.
டெல்லியில் நடைபெற்ற உணவு பதப்படுத்துதல் குறித்த மாநில அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற தமிழக பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில்,
திருவாரூர் வழித்தடத்தில் அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்றதால் திருவாரூரில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்ற ரயில்கள் நிறுத்தப்பட்டன.
திருவாரூர் வழியாக சென்னை சென்ற ரயில்களில் மற்றும் 2000 பேர் பயணம் செய்ததாக பயணச்சீட்டு பதிவு விவரங்கள் தெரிவிக்கிறது.
இவ் வழியாக சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் உள்ளிட்ட ரயில்கள் அகல ரயில் பாதை பணியால் நிறுத்தப்பட்டுள்ளன.
புகழ் பெற்ற வழிப்பாட்டு தலமான திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், சிக்கல் சிங்காரவேலர், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு பொது மக்கள் சென்று வர திருவாரூர் வழித்தடமே மையமான பகுதியாக உள்ளது.
எனவே பொது மக்கள் பலன் பெறும் திருவாரூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை இயக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அமைச்சர் மதிவாணனின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, நிறுத்தப்பட்ட ரயில்கள் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications