உள்ளாட்சி இடைத் தேர்தல்-திமுக வெற்றி
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக 50 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
249 பதவியிடங்கு நடந்த தேர்தலில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 14 நகராட்சி வார்டு உறுப்பினர், 5 மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர், 17 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 50 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 19 நகராட்சி வார்டு உறுப்பினர், 1 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 24 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், 14 நகராட்சி வார்டு உறுப்பினர், 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 17 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
3 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் மதிமுக வேட்பாளர்களும், ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
1 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 4 நகராட்சி வார்டு உறுப்பினர், 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 12 பதவியிடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புறநகர் பகுதிகளில் திமுக வெற்றி:
சென்னையைப் பொறுத்தவரை ஆலந்தூர், திரிசூலம், பல்லாவரம், சிட்லப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் ஆகிய புறநகர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
பீர்க்கன்கரணையில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications