பெரம்பலூரில் ஜெ. பிறந்த நாள் வரவேற்பு வளைவு இரவில் இடிப்பு
பெரம்பலூர்: அதிமுகவினரால் பெரம்பலூரில் கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா பிறந்த நாள் வரவேற்பு வளைவை போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக இடித்துத் தள்ளி விட்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஜெயலலிதாவின் 56வது பிறந்த நாளையொட்டி துறைமங்கலம் என்ற கிராமத்தில், மூன்று ரோடு மற்றும் நான்கு ரோடு ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் வளைவுகளை பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் கட்ட ஏற்பாடு செய்தார். இதற்கு பெரம்பலூர் நகராட்சி ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் இந்த வளைவுகளைக் கட்டினார்.
இதனை எதிர்த்து பெரம்பலூர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் அப்துல்பாரூக் என்கிற பாரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வளைவு அமைக்க தற்காலிக தடை விதித்தது. இதனால் கட்டுமானப் பணி நின்றது.
பின்னர் இந்த வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதித் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,
போக்குவரத்து இடையூறாக உள்ள நடுவில் உள்ள தூணை எடுத்து விட்டு கட்டிக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பாரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை 31ம் தேதி பிறப்பித்த உத்தரவில், இரு வளைவுகளையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பின் நகல் கடந்த வாரம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் ஆகியோருக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து 6ம் தேதி இரு வளைவுகளையும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 7ம் தேதி உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்ததால் தள்ளி வைக்கப்பட்டு நேற்று இரவு இடித்துத் தள்ளப்பட்டது.
பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன வளைவு இடிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications