ரூ.20 கோடி கொடுத்தால் துணைவேந்தர்!
சென்னை: ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி கொடுத்தால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியைப் பெற்றுவிடலாம் என்ற மோசமான நிலை நிலவுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஐஐடி கான்பூர் தலைவருமான மு.அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியத் தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் தேசிய அறிவுசார் ஆணையம் குறித்த யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் பேசிய அனந்தகிருஷ்ணன்,
பல்கலைக்கழகங்கள், பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் அல்ல. சிறந்த சிந்தனைத் திறன் உடைய பட்டதாரிகளையும், ஆய்வு மாணவர்களையும் உருவாக்கும் இடம்.
பல்கலைக்கழகங்களில் உள்ள பாடதிட்டங்கள், தேர்வு முறைகள், கற்பிக்கும் முறை ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல், இளநிலை பட்டம் முடித்தவர்களே பாடம் நடத்தும் சூழல் உள்ளது. பி.எச்டி. முடித்தவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் பணியாற்றுகின்றனர்.
உயர்கல்வியில் 15க்கும் மேற்பட்ட கவுன்சில்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு முறைகேடுகளும், குளறுபடிகளும்தான் நடக்கின்றன.
யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து துணைவேந்தராகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ரூ.10 கோடியோ, ரூ.20 கோடியோ கொடுத்தால் போதும், துணைவேந்தராகிவிடலாம்.
துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் அரசியல் தலையீடுகள், குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. பல்கலைக்கழகங்கள் செயல்பட அரசு நிதி மட்டும் ஒதுக்க வேண்டும். அவை தன்னாட்சியுடன் இயங்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கு ரூ.1.5 கோடி கொடுத்து சேரும் நிலை உள்ளது என்றார் அனந்தகிருஷ்ணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications