காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நீர்-முதல்வர்
சென்னை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக கடந்த 28.07.09 முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துவக்கத்தில் 5 ஆயிரம் கன அடி நீர் என ஆரம்பித்து தற்போது 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் இருக்கும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்த காரணத்தால், மேட்டூரின் கொள்ளளவான 120 அடி எட்டப்படவில்லை. அதிகபட்சமாக 101 அடியை மட்டுமே எட்டியுள்ளது. அதுவும் தற்போது 91 அடியாக குறைந்துவிட்டது.
வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழகத்தில் ஆரம்பிக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை இன்று முதல் 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் போதிய மழையின்மை காரணமாக, கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முறையீட்டை ஏற்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் வெண்ணாற்றில் தற்போது வழங்கப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications