பெண் வன்கொடுமை சட்டத்தில் திமுக கவுன்சிலர் கைது
தக்கலை: நகராட்சி அதிகாரி முன்னிலையில் பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் திமுக கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் தக்கலை அடுத்த திருவிதாங்கோடு பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் வேலப்பன். இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். இவர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணியை சந்திக்க சென்றார். அப்போது அவரது அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் சபீனா, பதிவு எழுத்தர் சமீமா பீவி ஆகியோர் இருந்தனர்.
அப்போது பெண் அதிகாரிகள் இருவரையும் கவுன்சிலர் வேலப்பன் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி தக்கலை போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வேலப்பனை கைது செய்தனர். இவர் மீது 2002ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திமுக கவுன்சிலர் கைதான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications