பொறாமையால் எங்களைக் குறை கூறுகிறார்கள் -தங்கபாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறாமை காரணமாக எதிர்க்கட்சிகளை அழைக்கவில்லை என்றும், இலங்கை அரசுக்கு துணை போய்விடும் என்று அறிக்கை விடுபவர்களை என்னவென்று சொல்வது? என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தங்கபாலு விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் முகாம்களில் இருக்கும் தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து அவர்களுக்கு நிரந்தரமாக வாழ்வுரிமை பெற்றுத்தரும் நோக்கத்தோடு மத்திய மற்றும் மாநில அரசின் ஏற்பாட்டில் தமிழகத்தை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சென்றுள்ளனர்.

ஆனால், அந்த பயணம் குறித்து பல கட்சிகள் தங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளை எதிர்ப்பு என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அக்கறையில்லாத எதிர்க்கட்சிகள்...

அவர்கள் எதிரிக்கட்சியாக செயல்படகூடாது. உண்மை மறைத்து மத்திய, தமிழக அரசுகளின் எதிரியாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். அதை தவிர அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை வேறு எதுவும் இல்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.

பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த போது இவர்கள் உடன் வந்தார்களா? அப்போது இல்லாத அக்கறை இப்போது மட்டும் வந்தது ஏன்?

இந்த குழுவினர் தமிழர்களின் நிலையை கண்டறிந்து அதன் அடிப்படையிலான அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் அளித்து, அதன் மூலம் பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் சமர்ப்பித்து நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் பொறாமை காரணமாக எதிர்க்கட்சிகளை அழைக்கவில்லை என்றும், இலங்கை அரசுக்கு துணை போய்விடும் என்று அறிக்கை விடுபவர்களை என்னவென்று சொல்வது?

ஒதுங்கியிருப்பவர்களை ஓரம்கட்டிவிடுவார்கள்...

இவர்கள் இடம்பெற்றால் தான் அது உண்மையான குழு என்பது போலவும், இவர்களை அழைக்காமல் சென்றால் அது ராஜபக்சேவுக்கு துதிபாடும் குழு என்பது போலவும் விமர்சிக்கின்றனர். இந்த குழுவின் இலங்கை பயணமும், அவர்கள் அளிக்கப் போகும் அறிக்கையும் இலங்கை தமிழர்களுக்கு புனர்வாழ்வாக அமையும் என்பது நிச்சயம்.

மத்திய, மாநில அரசுகளின் எல்லா பணிகளையும் ஏசுவதும் பேசுவதும் தொடர்ந்தால் ஏற்கனவே ஜனநாயக வழியில் நடந்த தேர்தலில் மக்கள் ஒதுக்கியிருக்கும் எதிர்க்கட்சிகளை இனி நிரந்தரமாக ஓரம் கட்டிவிடுவார்கள் என அந்த அறிக்கையில் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+