மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு சுறு சுறு பண வினியோகம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கும் வேலையில் முக்கியக் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனவாம்.
வாக்காளர்களிடம் சாதனைகளைக் கூறி ஓட்டுக் கேட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போது கரன்சியைக் காட்டி கேட்பது (கெடுப்பது) தான் புதிய பாணி அரசியலாக மாறியுள்ளது. இந்த புதிய பாணி அரசியல் மகாராஷ்டிராவுக்கும் பரவி விட்டது.
அங்கு 288 சீட்கள் கொண்ட சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். மைக் செட்டுகளுத்தான் ஓய்வே தவிர அரசியல் கட்சியினர் இன்னொரு வேலையில் படு மும்முரமாக உள்ளனர். அது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பது.
வாக்காளர்களுக்கு பணம், மது, உணவு உள்ளிட்டவற்றை வழங்கும் வேலையில் பல வேட்பாளர்கள் மும்முரமாக உள்ளனராம். பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கல் இவர்கள்.
நேற்று கோலாப்பூர் பகுதியில், ஒரு டிரக் விபத்தில் சிக்கியது. அந்த டிரக்கில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்தன. இவற்றைக் கைப்பற்றிய போலீஸார், இவை அனைத்தும் வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டு செல்லப்பட்டவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கோலாப்பூரில் கடத்தல் சரக்கு பறிமுதல் செய்யப்படுவது இது 3 வது முறையாகும்.
இதுகுறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் கூறுகையில், சிலர் வாக்காளர்களை விலைக்கு வாங்க இப்படி மது பாட்டில்களை கடத்திச் செல்கின்றனர் என்றார்.
ஆனால், சிவசேனா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ராஜேந்திர பட்னி என்பவரை வாக்காளர்களுக்கு உணவு கொடுத்தபோது தேர்தல் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 பேர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததை, ஐபிஎன் லோக்மாத் தொலைக்காட்சி சேனலின் உதவியோடு தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். சரத் பவார் பேரணிக்கு வந்தவர்களுக்கு இந்தப் பணப் பட்டுவாடா நடந்தது.
மும்பையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் பரத் பரேக் பயணம் செய்த வாகனத்தை ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications