விஞ்ஞானியை நரபலி கொடுக்க முயன்ற விஞ்ஞானிகள்?
குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரை இரு மூத்த விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Defence research and development establishment) விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா.
இவர் 4 நாட்களுக்கு முன் குவாலியர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தனது கணவருடன் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளான காமேஸ்வர ராவ், பாஸ்கர் ஆகியோர் அவரை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ராணுவத்தின் ரக்ஷா விஹார் காலனியில் வசிக்கும் காமேஸ்வர ராவ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி சுசில் குமாரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அங்கு சுசில் சென்றபோது பாஸ்கர் ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது சுசில் குமாருக்கு குடிக்க பானம் கொடுத்துள்ளனர் இரு விஞ்ஞானிகளும்.
அதை அருந்திய சுசில் குமார் மயங்கியுள்ளார். இந் நிலையில் கூர்மையான கத்தியுடன் இருவரும் அவரை நெருங்கியுள்ளனர். அப்போது பாஸ்கர் மந்திரங்களை ஜெபித்தபடி அருகே வந்ததால் அந்த சத்தத்தில் சுசில் குமார் முழித்துள்ளார்.
தன் கழுத்துக்கு அருகே கத்தியுடன் இரு விஞ்ஞானிகளும் நின்றிருந்ததைப் பார்த்து தப்பியோட அவர் முயன்றுள்ளார். அப்போது இருவரும் அவரை பிடித்து இழுக்கவே, உதவி கேட்டு குரல் எழுப்பினார் சுசில்.
இந்த சத்தம் கேட்டு வாட்ச்மேன் ஓடி வரவே அவரை விட்டுவிட்டனர் இரு விஞ்ஞானிகளும்.
ராவின் வீட்டிலிருந்து சுசில் குமார் தப்பியோடுவதை அண்டை வீட்டினரும் வாட்ச்மேனும் பார்த்துள்ளனர்.
தப்பியோடுகையில் வலது கையில் ஏற்பட்ட காயத்துடன் கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் சுசில்குமார்.
நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் இருப்பது வெட்கக்கேடு.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications