ராஜபக்சே அழைப்பின் பேரில் சென்ற குழு- ராஜா
தென்காசி: தமிழகத்தில் இருந்து சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசு குழு அல்ல. ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சென்றுள்ள குழு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறுகையில்,
பணவீக்கம் குறைந்துள்ளபோதும் நாட்டில் விலைவாசி குறையவில்லை. ஆளும் காங்கிரஸ் அரசு பின்பற்றி வரும் தவறான கொள்கைதான் இதற்கு காரணம்.
விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அத்திவாசிய உணவு பொருட்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் ரூ. 2 அரிசி...
இடதுசாரிகள் எப்போதுமே ஆளும்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பொது விநியோக திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழே அல்லது மேலே என்ற பகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட வேண்டும்.
ஈராக், லெபனன், பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மனித உரிமை அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவே இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று குற்றம் சாட்டும் போது மத்திய அரசு இதுகுறித்து வாய் திறக்கவி்ல்லை.
ரூ. 500 கோடி யாருக்கு போகிறது...
இலங்கையில் மத்திய அரசு வழங்கும் ரூ. 500 கோடி தமிழர்களுக்கு போய் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம். தமிழக மீனவர்கள் படும் துன்பத்திற்கு கச்சதீவு உடன்பாடிக்கையே காரணம். எனவே அதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது தமிழகத்திலிருந்து சென்றுள்ள எம்பிக்கள் குழு அரசு சார்பில் செல்லுகின்ற குழு அல்ல. ராஜபக்சே அழைப்பின் பேரில் செல்லுகின்ற குழு ஆகும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications