டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள்-100 பேர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 70 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, செங்கம் பகுதிக்கு அருகில் உள்ளது தானாமேடு. இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும் குடிமகன்கள் போதையில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளிடம் ரகளை செய்யும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பொது மக்கள் அப்பகுதியிலிருந்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தானாமேடுக்கு அருகில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் செங்கம், திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு செல்ல இங்கு வந்து பேருந்தில் செல்ல வேண்டும் என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமிருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் 'குடி'மகன் ஒருவர் வம்பு இழுத்து வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த பொது மக்கள் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் இன்று காலை போராட்டம் நடத்தினர்.
சுமார் 70 மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
திருவண்ணாமலை வட்டாச்சியர் முருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக் கடை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என உறுதியளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications