ஜார்க்கண்ட் -ஆதிவாசி பெண்கள் மீதான 1 லட்சம் வழக்குகள் அதிரடி வாபஸ்
டெல்லி: நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், மக்களின் நம்பிக்கையைப் பெறும் பொருட்டு, அம்மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்கள் மீது தொடரப்பட்ட கிட்டத்தட்ட 1 லட்சம் வழக்குளை மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது.
மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.
ஆதிவாசி மக்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். சிறு சிறு வழக்குகள் போடப்பட்டுள்ளதால், ஆதி வாசி மக்கள் காவல்துறையினரின் விசாரணைக் கொடுமைக்குள்ளாகும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். எனவே இதுபோன்ற வழக்குகளை வாபஸ் பெறலாம் என்று மாநில ஆளுநர், உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தார்.
காடுகளில் பழங்கள் பறித்தல், மரம் வெட்டுதல், காடுகளில் ஆடு, மாடுகளை மேய விடுதல், வேட்டையாடுதல், ரிசர்வ் காடுகளுக்குள் அனுமதியின்றி நுழைதல் போன்ற சிறு சிறு வழக்குகள் ஆதிவாசிப் பெண்கள் மீது தொடரப்பட்டிருந்தது. இதுபோன்ற கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications