ஸ்வைன்-இந்தியாவில் இதுவரை 396 பேர் பலி
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் ஒருவர் பலியானார். இதையடுத்து நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 165 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில் 112, ஆந்திரா 42, குஜராத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் மேலும் 140 பேருக்கு பரவியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 30 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தலா 22 பேர். மகாராஷ்டிரா 23, கேரளா 13, ஹரியானாவில் 8 பேருக்கும் இந்த நோய் பரவியுள்ளது.
மேலும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த நோய் விடலை பருவத்தில் இருப்பவர்களுக்கம், ஆரோக்யமானவர்களுக்கும் அதிகம் பரவுவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்கு மெக்சிகோவில் மார்ச் 18 முதல் ஜூன் 1 வரையிலும், கனடாவில் ஏப்ரல் 16 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையிலும் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,525 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசலில் 1202 , அமெரிக்காவில் 982, அர்ஜென்டினாவில் 580 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications