அருணாச்சல் 72%, ஹரியாணா 70%, மகா. 60%- வாக்குப் பதிவு
மும்பை: அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணாவில் 70, மகாராஷ்டிராவில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நேற்று இந்த மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடந்தது.
மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு காலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த மாநிலத்தில் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
பாஜக-சிவசேனை ஒரு அணியாகவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் வேதிகே தனித்தும் போட்டியிடுகின்றன.
துவக்கத்தில் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு மாலையில் கலைகட்டியது. முடிவில் அங்கு 60 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.
அங்கு சில பகுதிகளில் நக்சைலட்டுகள் தாக்குதல் நடத்தினர். கட்சிரோலி, சந்திரப்பூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பை மீறி துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.
நக்சல் பகுதியில் 55% வாக்குப் பதிவு...
இந்நிலையில் கட்சிரோலி மாவட்டம் காம்தலா கிராமத்தில் உள்ள வாக்குசாவடிகளில் சிலவற்றை நக்சல்கள் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். வாக்குச் சாவடிகளில் மாட்டி கொண்ட தேர்தல் அதிகாரிகளை கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று மீட்டனர்.
இருந்த போதிலும் இப்பகுதியில் 55 சதவீதம் மக்கள் வந்து வாக்களித்தனர்.
அருணாச்சல் அதிகம்...
60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல் பிரதேசத்தில் தான் அதிகபட்ச வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 72 சதவீத மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை சிறப்பாக செய்துள்ளனர்.
ஹரியாணாவில் 70 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. அங்கு கைய்தால் மாவட்டத்தில் கூல்கா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தில்லு ராம் மற்றம் சுயேட்சை வேட்பாளர் குல்வந்த பசிஹர் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாக்குசாவடி ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications