மழைக்கு முன் மறு குடியமர்த்தல் இல்லை-இலங்கை
கொழும்பு: மழைக்காலத்துக்கு முன்பே தமிழர்களை மறு குடியமர்த்துவது இயலாத காரியம் என இலங்கை தெரிவித்துள்ளது.
வன்னி தடுப்பு முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுடான போர் முடிந்ததாக அறிவித்த இலங்கை அரசு முகாம்களில் உள்ள தமிழர்களை 180 நாட்களுக்குள் மறுகுடியமர்த்தி விடுவோம் என கூறியிருந்தது.
ஆனால் இப்போது போர் முடிந்து 150 நாட்களாகி விட்டது. இன்னும் மறுகுடியமர்த்தலை சரிவர மேற்கொள்ளாமல் உள்ளது இலங்கை அரசு.
தற்போது பருவ மழை நெருங்கி வருகிறது. இதனால் முகாம்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. மழை வந்து விட்டால் நோய்கள் அதிகரித்து விடும், பெரும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நியூயார்க்கைச் சேர்ந்த ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளது.
ஆனால் மழைக்காலத்துக்குள் இடம் பெயர வைப்பது இயலாத காரியம் என அந்த நாட்டு மனித உரிமைத் துறை அமைச்சர் ராஜீவ் விஜயசிங்க கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போது பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது முகாம்களின் நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலத்திற்குள் இங்குள்ளவர்கள் அனைவரையும் மறு குடியமர்த்துவது இயலாத காரியம் என்கிறார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications