சுனாமி நிவாரணம்-வெள்ளை அறிக்கை கோரும் பாஜக
சென்னை: சுனாமி நிவாரணப் பணிகளில் கோடி கணக்கில் பண மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி தமிழகத்தில் பேரழிவை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏராளமானோர் நிதி உதவி அளித்தனர். ஆனால் அந்த நிதிகள் மக்களை சென்று சேரவில்லை.
தற்போது சுனாமி வந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் மக்கள் உதவியை எதிர்பார்க்கும் அவலநிலை தான் இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இஆர்டி நிறுவனம் தென்னிந்திய திருச்சபைக்கு அனுப்பிய ரூ. 17 கோடியே 63 லட்சம் சுனாமி நிவாரண நிதியில் ரூ. 7.5 கோடி எங்கு போனது என்று தெரியவில்லை.
அதை சிலர் தங்களது சொந்த செலவுக்காக எடுத்து மோசடி செய்துள்ளனர். அவர்கள் வீடு, பங்களா, கார் என சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அதில் எஞ்சிய பணமும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை.
சுனாமி நிவாரணம் நிதியை மோசடி செய்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே வரவில்லை. இந்த நிவாரணப் பொருள்களையும், நிதி உதவிகளையும் அரசின் மூலமாக வழங்கியிருந்தால் இந்த கொள்ளை சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
இப்போது வெளிவந்திருக்கும் மோசடி கடுகளவுதான் என்று பொதுநல அமைப்புகள் கருதுகின்றன.
சுனாமி ஏற்பட்டதிலிருந்து பல்வேறு அமைப்புகள் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரட்டிய நிதி எவ்வளவு? அது எவ்வாறு செலவிடப்பட்டது? என்பது குறித்து அரசு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications