விலங்கை கழட்டாத கைதி-மல்லுக்கட்டிய போலீஸ்
சென்னை: சென்னை நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த கைதியின் கைவிலங்கை போலீஸார் அவிழ்க்க முயன்ற போது அந்த கைதி மறுத்துவிட்டார். இதையடுத்து அவருடன் மல்லுக்கட்டிய போலீஸார் கட்டி புரண்டு ஒரு வழியாக கைவிலங்கை கழட்டினர்.
நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மகாலிங்கம் என்பவரை தர்மபுரி போலீஸார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்தனர். நேற்று அவரை சென்னை 5வது கூடுதல் செசன்சு தடா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
தீவிரவாதிகள் அல்லது முக்கிய வழக்குகளில் சிக்கியிருப்பவர்களை மட்டுமே போலீஸார் கைவிலங்குடன் அழைத்து வருவது வழக்கம். விசாரணை கைதிகளை கைவிலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரக்கூடாது.
ஆனால் போலீஸார் சில சமயங்களில் சில விசாரணை கைதிகளையும் கைவிலங்கிட்டு அழைத்து வருகின்றனர். நீதிமன்றத்துக்குள் நுழையும் முன் அவர்களைது கைவிலங்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.
அதேபோல் மகாலிங்கத்தின் கைவிலங்குகளை போலீஸார் கழட்ட முயன்றனர். ஆனால், மகாலிங்கம், நீதிபதியிடம் தான் கைவிலங்கிட்டு கூட்டி வருவதை காட்ட வேண்டும், போலீஸாரின் தவறை சுட்டிகாட்ட வேண்டும் என நினைத்து கைவிலங்கோடு நீதிமன்றத்துக்குள் நுழைந்துவிட்டார்.
அந்நேரம் நீதிபரம் சீட்டில் இல்லை. இதை பார்த்த போலீஸார் நீதிபதி வருவதற்கு முன் கழட்ட முயன்றனர். ஆனால், மகாலிங்கம் கைகளை இந்த பக்கம் அந்த பக்கம் என திருப்பி போலீஸாருக்கு போக்கு காட்டினார். இதையடுத்து போலீஸார் அவர் மீது பாய்ந்து கைவிலங்கை கழட்ட முயன்றனர்.
சுமார் 10 நிமிடத்துக்கு மேலாக கைதியுடன் கட்டி புரண்ட போலீஸார் இறுதியில் ஒரு வழியாக கைவிலங்கை கழட்டினர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications