அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்துக்கு அரசு ஒப்புதல்!

அஜீம் பிரேம்ஜி பெயரில் பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்கும் முயற்சி நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. முழுக்க முழுக்க தனியார் பல்கலைக் கழகமாக இது இயங்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை. ஆனால் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் எந்தப் பல்கலைக் கழகமும் அமைக்க முடியாது. எனவே இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருந்த இந்த முயற்சி, ஒரு வழியாக நேற்று நிறைவேறியது.
இந்தப் பல்கலைக் கழகம் தனியார் கல்வி அமைப்புதான் என்றாலும், அரசின் கட்டுப்பாடு நிச்சயம் இருக்கும். அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக சட்டம் 2009 -ன் படி இந்த பல்கலைக் கழகம் உருவாகிறது.
பெங்களூருவில் அமையும் இப்பல்கலைக் கழகம், மாநிலத்தில் உள்ள பள்ளிக் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும்.
அரசுப் பள்ளிகளின் ஆசிரியைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கும். கல்வியியல் பட்டப் படிப்புகள், தொழில் நுடபத் துறைப் படிப்புகள் இங்கு கற்றுத் தரப்படும். கர்நாடக மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இப்பல்கலைக் கழகத்தின் கட்டண விகிதங்கள், சேர்க்கை விதிமுறைகளை மேற்பார்வை செய்வது, தேவைப்படாடால் திருத்தும் அதிகாரம் போன்றவை மாநில அரசிடம் இருக்கும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என விப்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications