சத்யம் நிறுவன ஊழியர் படுகொலை- சாக்குப் பையில் பிணம்
ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் ஊழியர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் அக்டோபர் 13ம் தேதி படுகொலை செய்யப்பட்டு உடல் சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட ஊழியரின் பெயர் எஸ்.சந்திரசேகர். இவர் ஹைடெக் சிட்டியில் உள்ள மகிந்திரா சத்யம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் படுகொலை செய்யப்பட்டு உடல் சாக்குப் பையில் கட்டப்பட்ட நிலையில், கர்வான் பகுதியில் உள்ள நகராட்சி வார்டு அலுவலகம் அருகே விடப்பட்டிருந்தது.
மெஹதிபுரம் அருகே உள்ள தல்லகடா என்ற இடத்தில், பகவன்தாஸ்பாக் பகுதியில் வசித்து வந்தார் சந்திரசேகர். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணமானது. இவரும், மனைவியும் மட்டும் வசித்து வந்தனர்.
சந்திரசேகர் குறித்து அவரது மனைவி அனுஷா கூறுகையில், அக்டோபர் 11ம் தேதி இரவு பத்தரை மணிக்கு இரண்டு பேர் வீட்டுக்கு வந்தனர். அவர்களை தனது நண்பர் என எனது கணவர் என்னிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர்களுடன் பஸ்ராவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அக்டோபர் 13ம் தேதி வந்து விடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் திரும்பி வரவில்லை.
ஏன் பஸ்ராவுக்கு எனது கணவர் அந்த இரண்டு பேருடன் கிளம்பிச் சென்றார் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை. அவர் கிளம்பிச் சென்றது முதலே என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் டிவிகளில் அடையாளம் தெரியாத ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. இதையடுத்து நான் பதட்டமடைந்தேன். எனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் போன் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து போலீஸில் புகார் செய்யச் சென்றபோது அவர்கள் கொல்லப்பட்ட உடலின் புகைப்படங்களை என்னிடம் காட்டினர். அது எனது கணவரின் உடல்தான் என்பதை நான் அடையாளம் காட்டினேன் என்றார்.
இந்தக் கொலை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications