செல்போன்: காஷ்மீரில் 'ப்ரீ பெய்ட்'க்கு தடை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 'ப்ரீ பெய்ட்' செல்போன் இணைப்புகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செல்போன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுக்கவுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில்,
பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது காலம் 'ப்ரீ பெய்ட்' இணைப்புகளைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 'ப்ரீ பெய்ட்' இணைப்பு வைத்துள்ள இம்மாநில மக்கள் 'போஸ்ட் பெய்ட்' திட்டத்துக்கு மாறிக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
'ப்ரீ பெய்ட்' இணைப்புகளுக்கும் 'போஸ்ட் பெய்ட்' இணைப்புகளுக்கும் மிகுந்த அளவு வேறுபாடு உண்டு. 'ப்ரீ பெய்ட்' இணைப்புகளை தீவிரவாதிகள் அதிக அளவில் பயன்படுத்துவதால் இதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 'ப்ரீ பெய்ட்' இணைப்புகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் 'போஸ்ட் பெய்ட்' திட்டத்துக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. ராணுவத்தினர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு மட்டுமே ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரூபாய் நோட்டுகள் எல்லை தாண்டி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன. இதைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அளவுக்கு இல்லை. ஒரு லட்சம் நோட்டுகளில் ஒரு கள்ள நோட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றார் சிதம்பரம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications