சீனாவை சந்திக்க தயார்-இந்திய விமானப் படை

இதுகுறித்து அவர் கூறுகையில், வடக்கு- கிழக்கு மாநிலத்தில் உள்ள விமானப் படை தளங்களை மேம்படுத்துவதில் சீனாவால் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
எப்படி திபெத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை சீனா மேற்கொள்வதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கவில்லையோ, அதேபோல, வடக்கு கிழக்கில், இந்தியா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் தலையிட சீனாவுக்கும் உரிமை இல்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முப்படைத் தளபதியான குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அருணாச்சல் பிரதேசம் சென்றார். இதை சீனா எதிர்த்தது. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ தனது நாட்டுக்குட்பட்ட ஒரு பகுதிக்குச் செல்வதை சீனா ஏன் கவலையாக பார்க்க வேண்டும்.
அருணாச்சல் பிரசேதத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்ததால்தான், அந்த மாநிலப் பிரச்சினையை சீனா கிளப்பி வருகிறது. அதை மனதில் கொண்டும், தேர்தலில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று கருதியும், பிரதமரின் பயணம் குறித்து கண்டனத்துக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படை யாரைப் பார்த்தும் பயப்படவில்லை. திபெத் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எதுவும் சொல்லவில்லை, செய்யவில்லை. அதேபோல சீனாவும் தனது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள விமான தளங்களில், ஹெலிபேடுகள் மேம்படுத்தப்படும். அனைத்து வசதிகளும் நவீனப்படுத்தப்படும்.
வட கிழக்கில் மட்டுமல் அல்லாது, தென் இந்தியாவிலும் கூட புதிய விமான தளங்களைத் தொடங்கி வருகிறோம்.
வட கிழக்கில் நிறுத்தி வைப்பதற்காக பெருமளவில் ஆகாஷ் ஏவுகணைகளை விமானப்படை சேர்த்து வருகிறது. தேஸ்பூர் விமான தளம் மற்றும் சீனாவுடனான எல்லைப் பகுதி மாநிலங்களில் உள்ள விமான தளங்களில் ஆகாஷ் ஏவுகணையும் நிறுத்தி வைக்கப்படும்.
தற்போது 2 ஸ்குவாட்ரன் ஆகாஷ் ஏவுகணை உள்ளது. மேலும், சில ஸ்குவாட்ரன்களைக் கேட்டுள்ளோம் என்றார் பார்பரோ.
பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம்:
இந் நிலையில் மத்திய நிதிதுறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,
அருணாசல் பிரேதசத்தில் பிரதமர் பிரசாரம் செய்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிம். அங்கு சட்டசபை தேர்தல் நடத்தி இருப்பதன் மூலம் இந்தியாவின் அரசியலமைப்புக்கு உட்பட்ட பகுதி என்பது நிரூபணம் ஆகிறது.
இந்திய அரசியல் அமைப்பின்படி அம்மாநில மக்கள் தங்களது பிரதிநிதிகளை மக்களவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு இருக்கும் போது சீனா பேசுவது தவறு. இது சீனாவின் வழக்கமான பேச்சுதான் என்றார்.
அருணாச்சல் இந்தியாவின் முக்கிய பகுதி: ராகுல்
ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கூறுகையில்,
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலம். தமிழ்நாடு, ஜார்கண்ட் போல் அருணாசல் பிரதேசமும் இந்தியாவின் மிக முக்கிய ஒரு மாநிலம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications