திருச்செந்தூர் தொகுதிக்கு டிசம்பரில் இடைத்தேர்தல்?
சென்னை: திருச்செந்தூர் தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.
தேர்தல் விதிகளின்படி காலியாக இருக்கும் இடங்களுக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தபோதும், வட மாநிலங்களில் இடைத் தேர்தல் நடந்தபோதும் திருச்செந்தூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தல் கமிஷன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந் நிலையில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,
திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னமும் 1 சதவீத வாக்காளர்களுக்குத்தான் அடையாள அட்டை கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.
இந் நிலையில் திருச்செந்தூர் தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. தேர்தல் தேதியை அடுத்த மாதம் தேர்தல் ஆணையம அறிவிக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications