ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் கொடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று ராமேசுவரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இரவு 11 மணியளவில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 6 சிறிய கப்பல்களில் வந்த 25க்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து மீனவர்கள் வலைகளை அப்புறப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
அதற்குள் மீனவர்களின் படகுகளுக்குள் தாவிய கடற்படையினர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை அறுத்து எறிந்தனர்.
மீன் பிடி சாதனங்களையும் கடலுக்குள் தூக்கி வீசினர். அகஸ்டின் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த 4 பேரையும் கடற்படையினர் சரமாரியாகத் தாக்கிவிட்டு அனைவரையும் துரத்தி அடித்தனர்.
இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து போலீசில் புகார் தந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த 4 மீனவர்களும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவிட்டு சமீபத்தில் தான் கடலுக்குத் திரும்பினர்.
இந் நிலையில் திமுக-காங்கிரஸ் குழு இலங்கையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீனவர்களை கடற்படையினர் தாக்கினர். இப்போது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications