இனி முதலில் அணு ஆயுத தாக்குதல்: ரஷ்யா

தனது பாதுகாப்பு குறித்த கொள்கையில் ரஷ்யா செய்யவுள்ள இந்த மாபெரும் மாற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தி, எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்துள்ள ரஷ்யா தனது பாதுகாப்புக் கொள்கையில் இதற்கான திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
இந்த திருத்தத்தை செய்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அதை அதிபர் டிமிட்ரி மெத்வதேவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தத் தகவலை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலே பட்ருஷே உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், இப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ரஷ்யாவுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பாதுகாப்புக் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் தேவையில்லாமல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபடாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்துவோம் என்றார்.
விளாடிமிர் புடின் ரஷய அதிபராக இருக்கும்போது தான் இந்தத் திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் ரஷ்ய பிரதமராகிவிட்டார். ஆனாலும், அவர் நியமித்த மெத்வதேவ் தான் அதிபராக உள்ளார்.
இப்போதும் நாட்டை வழி நடத்துவது புடின் தான் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ரஷ்ய அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் தான் புடின் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
ஆனால், அவர் பதவி விலகும்போதும் அவருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போதும் உள்ளது.
இந் நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
அரசு முறைப் பயணமாக ரஷ்யா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவக் கொள்கையில் இடம் இல்லை என்று மட்டும் கூறினார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளும் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதி்ல்லை என்ற கொள்கை உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications