நாள் 1: 2400 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர் - டி.ஆர்.பாலு
சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து நேற்று 2400 தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு தலைமையின திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு இலங்கை சென்று திரும்பி வந்தது. இந்தக் குழுவின் வருகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, வியாழக்கிழமையிலிருந்து (நேற்று) 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய முதல் நாள் நிலவரம் குறித்து டி.ஆர்.பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையினை நேரில் கண்டறிய முதல்வர் கருணாநிதி கோரிக்கையினை ஏற்று சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு கடந்த 10 முதல் 14-ம் தேதி வரை இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையை கண்டு, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் விளக்கினர்.
அதற்கு அவர், இப்பிரச்சினைக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி முதல்வர் கருணாநிதியிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டது. அதோடு இக்குழுவின் விளக்க அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, நேற்று முகாம்களில் இருந்த 2,400 தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடியேறுவதற்காக பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களது உடனடி தேவைகளுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications