தம்பதி கொலை-தலைமறைவான பெண் கைது

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த அனந்தகிருஷ்ணன் (65), யமுனாபாய் (63) தம்பதி கடந்த புத்தாண்டு தினத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
வீ்ட்டில் அழுகிய நிலையில் இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன இவர்களுக்கு வாரிசு இல்லை.
ரயில்வேயில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணன் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய சங்கீதா என்ற பெண் அடிக்கடி அனந்தகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து செல்வார்.
அனந்தகிருஷ்ணன், யமுனாபாய் தம்பதி தனியே வசித்து வருவதை அறிந்து கொண்ட சங்கீதா அவர்களை கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடிக்கக் திட்டமிட்டார்.
தனது 4 நண்பர்கள் துணையுடன் தம்பதியைக் கொன்று 45 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்தார்.
இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதா உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
இதில் சங்கீதா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தினமும் குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்த இவர் திடீரென தலைமறைவானார்.
இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந் நிலையில் மாம்பலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கீதா சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications