தமிழகம் முழுவதும் தீபாவளி- அசைவம் இல்லாமல் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமையில் தீபாவளி வந்ததால் அசைவ சாப்பாடு இல்லாமல் மக்கள் தீபாவளியைக் கொண்டாடினர். இதனால் ஆட்டுக் கறி, கோழிக்கறி உள்ளிட்டவற்றின் விற்பனை மிக மந்தமாக இருந்தது.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பின்னர் தீபாவளிப் பண்டிகை இந்த முறை புரட்டாசி மாதத்தில் வந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளியை மக்கள் வழக்கமான உற்சாகத்தோடு புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் சாப்பிட்டு, கோவில்களுக்குச் சென்று கொண்டாடினர்.
பள்ளிப்பட்டில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பட்டாசு விபத்து குறித்துத் தகவல் வந்தால் உடனடியாக செல்லும் வகையில் தீயணைப்புப் படையினரும் உஷார் நிலையில் இருந்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையில் தீபாவளி வந்ததால், அசைவப் பிரியர்கள் தட்டுத் தடுமாறிப் போய் விட்டனர். நேற்று கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவை சுத்தமாக விற்பனையாகவில்லை. மிக மிக மந்தமான விற்பனையே இருந்தது. நாள், கிழமை பார்க்காத சிலர் மட்டுமே அசைவம் வாங்கினர்.
தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அன்றும் அசைவம் விற்கவில்லை. நேற்றும் இல்லை. இந்த நிலையில் இன்று மக்கள் பெருமளவில் அசைவம் வாங்க கடைகளில் குவிந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications