பட்டாசு சத்தம்-பாகனை மிதித்து கொன்ற யானை
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் பட்டாசு சத்தம் கேட்டதால் மிரண்டு போன கோவில் யானை பாகனை மிதித்துக் கொன்றது.
இந்தக் கோவிலில் காமாட்சி, ஜெயந்தி, அப்பு ஆகிய 3 யானைகள் உள்ளன. யானைகளை புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூரை சேர்ந்த பூமிநாதன் (40) என்பவர் பராமரித்து வந்தார்.
தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களாக பட்டாசு சத்தத்தால் யானைகள் தூங்காமல் தவித்தன. அதில் 45 வயதாகும் காமாட்சி என்ற யானை நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வலது புறக்கண் சற்று பார்வை குறைந்துள்ளது.
இந் நிலையில் தீபாவளிக்காக காலை 7 மணிக்குள் யானைகளை குளிப்பாட்டி அலங்கரிக்க வேண்டி இருந்ததால் பூமிநாதன் யானைகளை சுத்தம் செய்ய முயன்றார்.
அப்போதும் பட்டாசு சத்தம் கேட்டதால் மிரண்டுபோன காமாட்சி என்ற யானை பூமிநாதனை தும்பிக்கையால் தூக்கி சுவரில் அடித்து கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.
தகவல் அறிந்து ஓடி வந்த தலைமை பாகன் குணசீலனை வரவழைத்து மிரண்ட யானைகளை அமைதிப்படுத்தினர். இறந்த பூமிநாதனுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications