பாகிஸ்தான் நிலைமை படுமோசம்- இந்தியா
டெல்லி: பாகிஸ்தானில் நிலைமை மோசமாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
வசீ்ர்ஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் வசமிருந்த இரு முக்கிய பகுதிகளைக் கைப்பற்ற தரைப்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹக்கீமுல்லா மசூத் தலைமையிலான தலிபான் இயக்கத்தினர் மீது, ராணுவத்தினர் சனிக்கிழமை தாக்குதலைத் தொடுத்தது. 28,000 வீரர்கள், போர் விமானங்கள், டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 60 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளும் அவர்கள் மீது எதிர்தாக்குதல் நடத்தி வருவதால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களில் பாகிஸ்தானின் எப்-16 வகை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி வருகின்றன. ஹெலிகாப்டர் மூலமும் குண்டு வீசி வருகின்றனர்.
தலிபான்கள் பிடியில் உள்ள மகீன், லடா, கோத்காய் ஆகிய நகரங்களை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகின்றனர் ராணுவ வீரர்கள்.
இதனால் அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பி ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் பதுங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆப்கானிஸ்தானுக்குள் வந்து விடாமல் தடுக்க எதிர் முனையில் அங்குள்ள அமெரிக்க படைகளும் தாக்குதலை தொடங்கியுள்ளன.
சண்டை நடக்கும் பகுதியில் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இரு தரப்பு சண்டையிலும் சிக்கி அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பீதியில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இதுவரை 80 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கியானி கூறுகையில், 10,000 தலிபான் தீவிரவாதிகளை, 28,000 பேர் கொண்ட ராணுவப் படையினர் சுற்றிவளைத்து தாக்கி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை 10,000 குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்றார்.
இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறுகையில், பாகிஸ்தானில் தீவிரவாதம் படு வேகமாக பரவி வருகிறது. தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து வரும் எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.
நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்படும் எத்தகைய மிரட்டலையும் சந்திக்கும் வகையில் நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
அந்த வகையில் பாகிஸ்தானிலிருந்து, தலிபான்கள் மூலம் வரும் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் நிலையில் இந்தியா உள்ளது என்றார் அந்தோணி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications