நெல்லையில் கள்ள துப்பாக்கியுடன் 3 பேர் கைது - துப்பாக்கி ஆலையும் கண்டுபிடிப்பு
நெல்லை: நெல்லையில் பழிக்கு பழியாக கொலை செய்ய கள்ள துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கள்ள துப்பாக்கி தயாரித்து கொடுத்தவரும் கைதானார். கள்ளத்துப்பாக்கித் தொழிற்சாலையும் கண்டுபிடிக்கப்பட்டது.
வீரவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த செப் 29ம் தேதி அம்பாசமுத்திரத்தில் வைத்து அதே ஊரை சேர்ந்த அம்பலவாணன், பழனிசாமி, சார்லஸ் உள்ளிட்ட கு்ம்பல் வெட்டி கொலை செய்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய சிலரிடம் கள்ள துப்பாக்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நெல்லை டிஐஜி கண்ணப்பன், எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரன்கோவிலில் பைக்கில் வந்த ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த கந்தசாமி, மற்றும் செய்துங்கநல்லூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜோசப், ஆகியோரை சங்கரன்கோவில தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயசில் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது கந்தசாமியிடம் ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் இரு தோட்டாக்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கியை சங்கரன்கோவிலை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் வாங்கி்யதாக கந்தசாமி தெரிவித்தார். கந்தசாமி, நடராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நடராஜனிடம் இருந்து கள்ள துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த இரும்பு குழாய், 16 காலி தோட்டாக்கள், மற்றும் இரும்பு பைப், கோழி சண்டைக்கு பயன்படுத்தப்படும் கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் வீரபெருமாள் வீட்டிலிருந்து ஒரு கள்ள துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. நடராஜனிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன் துப்பாக்கி வாங்கிய அம்பையை சேர்ந்த முத்து என்பவரும் கைது செய்யப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications