ரெட்டி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா?-புது சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டரை மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராம் பாபு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சித்தூருக்கு ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றபோது செப்டம்பர் 2ம் தேதி விபத்தில் சிக்கி நொறுங்கியது இயற்கையானது அல்ல. இது மாபியா கொள்ளை கும்பலின் சதிவேலையாக இருக்கலாம்.
நான் எழுப்பியுள்ள சந்தேகத்தையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications