மதுரையில் 80 ஏக்கரில் தீவிரவாத ஒழிப்பு படை முகாம்
மதுரை: தென் மாவட்டங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும், முக்கிய இடங்கள், கோயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உதவியாக மதுரையில் 80 ஏக்கரில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவு அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தர்மபுரி மற்றும் தேனி மாவட்டம் கொடைக்கானல், முருகமலைப்பகுதிகளில் தமிழ் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்தது கண்டறியப்பட்டது.
கடந்தாண்டு போலீசாரின் அதிரடி வேட்டையில் நக்சலைட்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மறைமுகமாக செயல்படுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி தொடர்ந்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் மத்திய தீவிரவாத ஒழிப்பு படை முகாம் அமைகிறது. இதற்காக 80 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் ஒரு பிரிவைச் சேர்ந்த 45 வீரர்களை கொண்ட பட்டாலியன் இதில் இடம்பெறுகிறது. தற்போது குன்னூரில் பயிற்சி பெறும் இவர்கள், இரு மாதங்களில் மதுரை வர உள்ளனர்.
விரைவில் கருப்பாயூரணி பகுதியில் தற்காலிக முகாம் அமைக்க உள்ளதாக இப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications