வெயிலில் தகிக்கும் தமிழகம்-தாமதமாகும் வட கிழக்குப் பருவ மழை
சென்னை: வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்கும் வட கிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு பெய்யத் தவறியுள்ளது. ஒரு வாரத்திற்கு மழையை எதிர்பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பெருமளவு மழையை தருவது வடகிழக்கு பருவமழை. வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஆகும். தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு பெய்தது. ஆனால் சென்னை போன்ற வட மாவட்டங்களில் அந்த அளவுக்கு பலன் இல்லை.
வழக்கமாக தென்மேற்கு பருவ மழையினால் சென்னைக்கு பெருமளவில் மழை இருக்காது. ஜுலை மாதம் முதல் வெயில் அளவு குறைந்து மக்கள் நல்லமுறையில் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ணநிலை இருக்கும்.
ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக உள்ளது. கோடை காலம் போல வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. காலையிலேயே சுள்ளென்று வெயில் ஆரம்பித்து விடுகிறது. மாலை வரை வெயில் ஓய்வதில்லை.
சமீப நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் இரவில் லேசான பனியும் கொட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்கும் வட கிழக்குப் பருவ மழை வரவில்லை.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
வடகிழக்கு பருவமழையின்போது சராசரியாக தமிழ்நாட்டுக்கு 43.5 செ.மீ.மழை கிடைக்கும். சென்னையில் 73 செ.மீ.மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் சராசரியாக 32 செ.மீ.மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழையில் பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள் தான் அதிக பயன் அடையும்.
வடகிழக்கு பரும மழை சராசரியாக அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்கும். அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னதாக 7 நாள், அல்லது 20ம் தேதிக்கு பிறகு 7 நாள் மழை தொடங்கினால் அது வழக்கம்தான். எனவே வடகிழக்கு பருவமழை இப்போதும் தாமதமாகி விட்டது என்று சொல்லி விட முடியாது. இன்னும் 3 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சொல்லமுடியாது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 22ம் தேதி தொடங்கியது. 1915ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி தான் தொடங்கியது என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications