தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
நெல்லை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் 6699 டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. இக்கடைகளில் 33700 பேர் ஓப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அரசு ஊழியர்களுக்கு உள்ளதுபோல் தங்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமுல்படுத்த கோரி வந்தனர். இதை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி டாஸ்மாக் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அமல்படுத்தப்பட உள்ளது. ஊழியர்களுடன், மனைவி, பெற்றோர், குழந்தைகள், திருமணமாகாத சகோதர, சகோதரிகள் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
இதற்காக நவம்பர் 15ம் தேதிக்குள் பல்நோக்கு அடையாள அட்டை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பணியாளர்களின் சார்பில் டாஸ்மாக் நிர்வாகமே இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு தலா ரூ.600 பிரிமியம் செலுத்தி விடும். அடு்த்த மாதத்திற்குள் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது.
இத்திடடத்தின் கீழ் டாஸமாக் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் வரையில் இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும்.
என்னென்ன பாதிப்புகளுக்கு சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்பது விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி டாஸ்மாக் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான திட்டமும் அமல்படுத்தப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications