கலக்கும் தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
திருப்பூர்: தேசிய அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திருப்பூர் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற பெரியார் கண்ட கனவை சமத்துவபுரம் திட்டம் மூலம் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது இத்திட்டம். அடுத்த 5 ஆண்டுகளில் 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.
2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா முதல்வரானவுடன் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதுடன், கட்டப்பட்ட 145 சமத்துவபுரங்களும் கேட்பாரற்றுப் போயின. இதனால் அங்கு குடியிருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தததும் பராமரிப்பின்றி கிடந்த 145 சமத்துவபுரங்களையும் பராமரிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கினோம். மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கவும் உத்தரவிட்டோம்.
தேசிய அளவில் தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்களே சிறப்பிடம் பிடித்துள்ளதால் வங்கிக் கடன் தாராளமாக வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவிலுள்ள 10,081 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 2008-09ல் ரூ.11,132 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,174 கோடி தமிழக குழுக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்த கடனில் 20 சதவீதம் தமிழக குழுக்கள் பெற்றுள்ளன. அதற்கு உரிய காலத்தில் தமிழக குழுக்கள் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியதே முக்கிய காரணம் என்றார் ஸ்டாலின்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications