கைதி கொலை-9 பாளை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்
நெல்லை: பாளை மத்திய சிறையில் பழிக்குப் பழியாக கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 9 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளான செல்லப்பா, சன்னியாசி உள்பட 9 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் 26ம் தேதி பாளை வெளி சிறையில் இரண்டாம் பிளாக்கில் இருந்த பேச்சி்முத்து ஆதரவாளர்களான செல்லப்பா மற்றும் சன்னியாசியை மாணிக்க ராஜு என்பவரின் ஆதரவாளர்கள் இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கினர்.
படுகாயமைடந்த செல்லப்பா நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காயமடைந்த சன்னியாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிறை துறை ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக மாணிக்கராஜ் ஆதரவாளர்கள் எஸ்டேட் மணி உள்பட 9 பேர் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய சிறைகளுக்கு பலத்த போலீஸ் காவலுடன் மாற்றப்பட்டனர்.
பாளை சிறையில் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வரும் சில கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் சென்னை மற்றும் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக சிறை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications