என்.கே.கே.பி.ராஜா மீதான தாக்குதல்- சிபிசிஐடிக்கு மாற்றம்
ஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தாக்கப் பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் என்பவர், ஈரோடு எம்.எல்.ஏ. என்.கே.கே.பி.ராஜா, காஞ்சிகோவில் கொண்டையன்காட்டுவலசுவில் உள்ள அவரது பண்ணைவீட்டுக்கு அழைத்ததன் பேரில், கடந்த 21 ந் தேதி அதிகாலை தனது நண்பர் செல்வ குமார் என்பவரோடு சென்றபோது, என்.கே.கே.பி. ராஜா மற்றும் 9 பேர் தங்களை தாக்கி காயப்படுத்தியதாகவும், காவல் துறையினர் தங்களை மீட்டு வந்ததாகவும் காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளா.
இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட் டம் 147, 148, 342, 294 (பி), 323, 324, 506(2) மற்றும் ஆயுதத் தடைச் சட்டம் 25(1)(எ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் என்.கே.கே.பி.ராஜா தனது மனைவி மற்றும் சிலருடன் கொண்டையன் காட்டு வலசுவில் உள்ள பண்ணைவீட்டில் இருந்த போது, 21 ந் தேதி அதிகாலையில் பெருந்துறையை சேர்ந்த சிவ பாலன், செல்வகுமார் மற்றும் அடையாளம் தெரி யாத 10 நபர்கள் தனது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தங்களை தாக்கி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில், காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 324, 307, 452 ஆகிய பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளையும் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக ஏற்கனவே 2008 ம் ஆண்டு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இருக்கின்றன.
எனவே இந்த 2 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications