சென்னைக்கு சிபிஐ இயக்குநர் திடீர் பயணம்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அதிரடி சோதனைகள் நடந்து வரும் நிலையில் சிபிஐ இயக்குநர் அஸ்வினி குமார் திடீரென இன்று சென்னைக்கு வந்தார்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் அலுவலங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இந்த சோதனைகள் நடந்தன.
இந்த அதிரடி சோதனையால் திமு - காங்கிரஸ் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிபிஐ இயக்குநர் அஸ்வினி குமார் திடீரென இன்று சென்னைக்கு வந்தார்.
இன்று காலை சென்னைக்கு வந்த அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள், பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டபோது இது முழுக்க முழுகக தனிப்பட்ட பயணம். வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றார்.
அஸ்வினி குமாரின் பயணம் முன்பே திட்டமிடப்பட்டது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிபிஐ வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆராயவே இயக்குநர் வந்திருப்பதாக சிபிஐ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications