நலத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்தது திமுக அரசு - பொன்முடி
கடையநல்லூர்: மக்கள் நலத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்துள்ளது திமுக அரசு என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கடையநல்லூரில் அண்ணா நூற்றாண்டு விழா, திமுக அரசின் சாதனை விளக்க விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவில் உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில்,
அண்ணாவின் கொள்கைகளையும், திராவிட கழக இயக்க லட்சியங்களையும் செயல்படுத்தி அண்ணா நூற்றாண்டு விழாவை முதல்வர் கருணாநிதி சிறப்பாக கொண்டாடினார். ஆனால் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து கொண்டு அண்ணாவின் படத்திற்கு மலர் தூவுவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்.
நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவில் 110 மாணவிகள பட்டம் பெற்றனர். ஆனால் மாணவர்களில் 10 பேர் தான் பட்டம் பெற்றனர். வருங்காலத்தில் பெண்களிடம் இருந்து ஆண்கள் சம உரி்மை கோர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 50 ஆயிரம் ஆசிரியர்களையும், 2500 கல்லூரி பேராசிரியர்களையும் சுமார் 10 ஆயிரம் டாக்டர்களையும் நியமனம் செய்துள்ளனர். சிறந்த திட்டங்களை செயல்படுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மக்களை கவரும் அரசாக விளங்கி வருகிறது என்றார் அவர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications