ஆப்கனில் ஹெலிகாப்டர் விழுந்து 4 அமெரிக்க வீரர்கள் பலி
காபூல்: ஆப்கானி்தானில் இன்று காலை நடந்த 3 நேட்டோ படையினரின் ஹெலிகாப்டர் விபத்துக்களில் நான்கு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மூன்று ஹெலிகாப்டர்களில் இரண்டு நேருக்கு நேர் வானில் மோதி வெடித்தன. ஒன்று, போதைக் கடத்தல்காரர்களை கண்காணிக்கச் சென்றபோது எதிர் தரப்பினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு ஹெலிகாப்டர்களும் தெற்கு ஆப்கானிஸ்தானில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே இது விபத்தா அல்லது தலிபான்கள் இரு ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தினரா என்பது தெரியவில்லை.
ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் வேயன் ஷாங்க்ஸ் கூறுகையில், அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அமைதி காக்குப் படையினர் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
விபத்துக்குள்ளான இன்னொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததாக முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால் இதை எதிர்த் தரப்பினர் வீழ்த்தியதாக பின்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.
தீவிரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களைத் தேடி இந்த ஹெலிகாப்டர் சென்றபோது இச்சம்பவம் நடந்தது.
தலிபான்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து பதில் ஏதும் இல்லை.
இந்த ஆண்டு இதுவரை 256 அமெரிக்க வீரர்கள் உள்பட 424 சர்வதேசப் படையினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications