ராஜதானி ரயிலை நிறுத்தி டிரைவரை கடத்திய நக்ஸல்கள்
Subscribe to Oneindia Tamil

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.
ஜர்கிராம்- சார்டியா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது சிவப்புக் கொடிகளைக் காட்டி ரயிலை நக்ஸலைட்டுகள் நிறுத்தினர்.
தண்டவாளத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைத்து ரயிலை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து அதன் டிரைவர் மற்றும் துணை டிரைவரை நக்ஸல்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதனால் அந்த ரயில் நடுவழியில் நி்ன்று கொண்டுள்ளது. சம்பவ இடத்துக்கு போலீசாரும், ரயிலை தொடர்ந்து இயக்க டிரைவர்களும் விரைந்துள்ளனர்.
ஜார்க்கண்டில் 2 பள்ளிகள் தகர்ப்பு:
இந் நிலையில் ஜார்க்கண்ட் மாவட்டத்தில் இரு பள்ளிகளையும் நக்ஸலைட்டுகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications