இலங்கை தூதரக தாக்குதல்-நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி சரண்

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக டெல்லியில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் போராட்டம் நடந்தது.
அப்போது சாணக்கியபுரியில் உள்ள இலங்கை தூதரகம் மீது அக் கட்சியினர் சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கிருஷ்ணசாமி மற்றும் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்பட 12 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களை கைது செய்ய டெல்லி போலீ்ஸ் படை தமிழகம் வந்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த நீதிமன்றம், கீழ் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 12 பேர் சென்னை எழும்பூரில் உள்ள 5வது வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் அனைவரும் தலா ரூ.10,000 செலுத்தி தனி நபர் ஜாமீன் பெற்றுக் கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications