ரவுடிகளை கண்டு அஞ்சும் நிலையில் போலீசார்-அதிமுக

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் 3வது முறையாக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் இன்று சென்னை அருகே வானகரத்தில் நடைபெற்றன.
மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச் செயலாளர், ஊட்டியில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினார்.
5 மாதத்துக்குப் பின் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார் ஜெயலலிதா. வந்தது முதல் கட்சியினருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளார். கட்சி அலுவலகத்திற்கு இருமுறை வந்தார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களை அவர் கூட்டினார்.
சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் மதியம் 2 மணிக்கு இக்கூட்டங்கள் துவங்கின. இதில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கிய தீர்மானங்கள் விவரம்:
இலங்கைக்கு தமிழ்நாட்டு எம்பிக்கள் மேற்கொண்ட பயணம் கண் துடைப்பு நாடகமாகும்
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தவறி விட்டன.
முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட கேரளாவுக்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி தந்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காவிரி, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் ரவுடிகளைக் கண்டு போலீசார் அஞ்சும் நிலை உள்ளது. இதற்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன என்பது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறிய அறையில் செயற்குழு...
முன்னதாக மண்டபத்தின் அருகில் உள்ள சிறிய அறையில் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் 190 பேர் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரிய மண்டபத்தில் பொதுக்குழு...
இதைத் தொடர்ந்து மஹாலின் பெரிய மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
இதற்கு ஜெயலலிதா முன்னிலை வகித்தார். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர்.
தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் வரவேற்க, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
அரசியல் ஆலோசகர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.ஜெயக்குமார், மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் கருப்பசாமி உள்பட சிலர் பேசுகிறார்கள்.
பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறப்புரையாற்றுகிறார். அப்போது, தற்போதைய அரசியல் நிலவரம் பற்றியும், நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கு கட்சியினர் இப்போதிருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும்.
இந்தக் கூட்டங்களுக்குப் பின் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் மாற்றப்படுவர் என்றும் தெரிகிறது.
இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் பல நிர்வாகிகளும் சரியாக செயல்படவில்லை. மேலும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக தவறான எண்ணிக்கையைத் தந்தனர். அவர்களுக்கும் உரிய 'பாடம்' கற்பிக்கப்படலாம் என்கிறார்கள்.
இந்த முறை அசைவம் கிடையாது...
வழக்கமாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலையில் தொடங்கி மதியம் முடியும். அப்போது அசைவச் சாப்பாடு தரப்படும். சைவமும் இருக்கும். ஆனால் தற்போது கூட்டமே மதியம் தான் தொடங்குகிறது என்பதால் இந்த முறை சாப்பாட்டில் மாற்றம் செய்துள்ளனராம். அதாவது சைவச் சாப்பாடு மட்டும்தானாம்.
-
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
ராமதாஸுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்கிரவாண்டி வேட்பாளர்! அன்புமணி அணிக்கு டைவ் அடித்ததால் நீக்கம்! -
திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி!












Click it and Unblock the Notifications