கோவையில் அமையும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி
திருநெல்வேலி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ) சார்பில், நாட்டில் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும். இதில் கோவையும் இடம் பெறும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இ.எஸ்.ஐ சார்பில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் 50 கோடி ரூபாய் செலவில், 50 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கார்கே பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசுகையில்,
இ.எஸ்.ஐ. சார்பில், நாட்டில் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும், 12 மருத்துவ பட்டய மேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகங்களும் துவங்கப்படும். அதில், ஒரு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணி, பாட்னாவில் நடக்கிறது. இ.எஸ்.ஐ. தொழிலாளர்கள் அதிகமுள்ள கோவையிலும் மருத்துவக் கல்லூரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ.மூலம் 1.25 கோடி தொழிலாளர் குடும்பங்களின் ஐந்து லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். தமிழகத்தில், 55,984 நிறுவனங்களைச் சேர்ந்த 17 லட்சம் பேர் இ.எஸ்.ஐ., உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 60 ஆண்டாக இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ், தொழிலாளர் குடும்பங்கள் இலவச சிகிச்சை பெறுவதற்காக 144 மருத்துவமனைகளும், 1,400 மருந்தகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில், 50 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை விரைவில் துவங்கப்படும்.
பீடித் தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களைப் பெற முதலில் அவர்கள் தங்களது பெயர்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியமாகும். நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள் இணைந்து செயல்பட்டால்தான் தொழிலாளர்கள் அனைத்து பயன்களையும் பெறமுடியும் என்றார்.
இந்த விழாவில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், நெல்லை எம்.பி., ராமசுப்பு, மாவட்ட கலெக்டர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications